No. of views : (2509)

Rajini to light up four gopurams of Tiruvannamalai.

...................................................................................................

Posted on : 17/Nov/2010 4:10:50 AM



 
 
 
சிவனின் பஞ்சபூத தலங்களில், ஒன்றான திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் நடந்து சென்று மலையைச் சுற்றி வரப் பயன்படும் 14 கிமீ கிரிவலப் பாதைக்கும் தனது சொந்த செலவில் சோடியம் விளக்குகள் பொருத்தினார் ரஜினி. இது நடந்தது 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம். ரஜினியின் பிறந்த நாளுக்கு ஒரு தினம் முன்பாக அனைத்து விளக்குகளும் அமைக்கப்பட்டன. மொத்தம் 148 மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. அவற்றுக்கான மொத்த செலவான ரூ 10 லட்சத்தையும் ரஜினியே ஏற்றார்.

தற்போது மேலும் ஒரு திருப்பணியைச் செய்ய முன்வந்துள்ளார் ரஜினி. அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கும் தனது செலவில் ஒளிரும் விளக்குகள் பொருத்துகிறார் ரஜினி.

அதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் (போக்கஸ் லைட்டுகள்) பொருத்தப்பட உள்ளன. விரைவில் கார்த்திகை தீபத் திருநாள் வரவிருக்கும் நிலையில், இந்த விளக்குகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
 
 




 




 













This portal designed, developed and maintained by JB Soft System since year 2005. - 9840279047