https://www.Livechennai.com
LiveChennai GRT Offer

No. of views : (3953)

Bible Exhibition start in Chennai Today

Posted on: 12/Jan/2011 5:22:53 AM
சென்னையில் இன்று காலை பைபிள் கண்காட்சி துவங்கியது.  கண்காட்சியை ஈ.சி.ஐ. சென்னை பேராயர் சுந்தர்சிங் காலை 9.30 மணிக்கு துவங்கி வைத்தார்.இது வரும் 16-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும்.

இந்த பைபிள் கண்காட்சி மற்றும் தள்ளுபடி விற்பனையில் உலகிலேயே மிகச்சிறிய 2-வது பைபிள், மிகப்பெரிய பைபிள், ஆய்வு பைபிள்கள், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் பைபிள்கள், பல்வேறு கிறிஸ்துவ புத்தகங்கள், சிறிய குழந்தைகள் பைபிளை படிக்கும் வகையில் பட விளக்கங்களுடன் கூடிய பைபிள்கள், கண்பார்வையற்றவர்கள் படிக்கும0;் வகையில் தயாரிக்கப்பட்ட பிரெய்லி முறை பைபிள்கள், எழுத, படிக்கத் தெரியாதவர்கள் பைபிளை படிப்பதற்கு வசதியாக சோலார் பேட்டரி பைபிள்கள், டிஜிட்டல் பைபிள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இந்திய வேதாகமச் சங்கம், புக் ரூம் ஆகியவை இணைந்து சென்னையில் பைபிள் கண்காட்சி நடத்துகின்றன. இந்த கண்காட்சி சென்னை கெல்லீஸ் கார்னரில் உள்ள பிஷப் மாணிக்கம் அரங்கில் துவங்கியது.