Kumari Palany & Co

No. of views : (2639)

3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி வேண்டாம்

Posted on: 21/Sep/2010 3:04:45 AM
சளி, இருமல், காய்ச்சல், தலைவலி ஆகிய அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போட மாட்டோம். அவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பன்றிக்காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி, முட்டையிலிருந்து தயாரிக்கப்படுவதால் முட்டை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்களுக்கும், 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடக் கூடாது. சைனஸ், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய நோயாளிகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்தை அளிக்காமல் கையில் போட்டுக் கொள்ளலாம் என கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வக மருத்துவர் குறியுள்ளார் .

சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ 250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் தமிழக sp; அரசு அறிவித்து இருக்கிறது .

இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி  ரூ 50 குறைக்கப்பட்டது. அதன்படி,  தடுப்பு மருந்துக்கு ரூ 100, தடுப்பூசிக்கு ரூ 200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடப்பட்񈯷து.

Post your requirement - We will connect with the right vendor or service provider