https://www.Livechennai.com
LiveChennai GRT Offer

No. of views : (2362)

Onion prices will drop in next few days

Posted on: 23/Dec/2010 1:47:42 AM
கடந்த சிலநாட்களாக, மக்களை பெரும் கவலையடைய செய்த வெங்காயத்தின் விலை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, கிலோ ரூ. 100க்கு விற்கப்பட்ட வெங்காயம், நேற்று 60 என்ற அளவில் விற்பனையானது. இன்று, கேயம்பேடு மார்க்கெட்டில், ரூ. 45க்கு விற்பனையாகிறது. 

நேற்று ஒரு கிலோ மராட்டிய வெங்காயம் ரூ.60 ஆகவும், ஆந்திரா, கர்நாடகா வெங்காயம் கிலோ ரூ.55 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்திற்கு வெங்காய வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் பழையபடி ரூ 30-க்குள் விலை வந்துவிடும் எனத் தெரிகிறது.