Kumari Palany & Co

No. of views : (2310)

மகாதீபம் ஏற்றப்பட்டது

Posted on: 21/Nov/2010 8:11:52 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.  கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணிதீபம் ஏற்றப்பட்டது. அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

இதற்காக 6 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கொப்பரை, ஆயிரம் மீட்டர் நெய், 3500 கிலோ நெய் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். மகாதீபத்தை காண சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.  மகா தீபத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் மற்றும் மலையை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.