https://www.Livechennai.com
LiveChennai GRT Offer

No. of views : (3952)

Millenium Celebration of The Big Temple Thanjavur

Posted on: 22/Sep/2010 3:05:48 AM
தஞ்சை பெரிய கோவிலின் 1000வது ஆண்டு நிறைவு விழா  இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் விழாவில் இன்று மாலை 5.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. சீர்காழி சிவ சிதம்பரம் மற்றும் சுதா ரகுநாதன் ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 24ம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நிறைவு விழா  26ந் தேதி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இவ񉾭விழாவில் முதல்வர் கருணாநிதி உரையாற்றுகிறார். இந்த நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியிடப்பட உள்ளது.