https://www.Livechennai.com
LiveChennai GRT Offer

No. of views : (3118)

ஏழைகளுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்

Posted on: 18/Sep/2010 3:37:29 AM
பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்` என, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

"இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் தான் பன்றிக் காய்ச்சலுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் திட்டம், சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பு ஊசி போடவும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களிடம் இந்த குறைந்த தொகையையும் கூட இனி வசூலிக்க தேவையில்லை எனவும் இந்த அரசு முடிவெடுத்து, உடனடியாக நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளது". . இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.