https://www.Livechennai.com
LiveChennai GRT Offer

TNPSC announced VAO examination date

Posted on: 17/Dec/2010 1:34:16 AM
 பிப்ரவரி 27ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் (வி ஏ ஓ) தேர்வு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வு ஒரே தாளாக இருக்கும். பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும் இரு பிரிவுகளுக்கும் 150 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். 񇡴ேர்வுக்குத் தகுதி பெற 90 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28-ந் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.