https://www.Livechennai.com
LiveChennai GRT Offer

No. of views : (2526)

Free Yoga Training in Chennai Parks

Posted on: 17/Dec/2010 1:17:10 AM
சென்னை கோட்டூர் புரத்தில் ரூ.25 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை மேயர் மா. சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். 

ஜெ.ஜெ.நகர், ஸ்டான்லி நகர், கே.பி. பார்க், புரசைவாக்கம், வில்லிவாக்கம், மந்தைவெளி, புதுப்பேட்டை, மைலாப்பூர் உள்ளிட்ட 10 மண்டலங்களில் நட்சத்திர அந்தஸ்துடன் விளையாட்டு திடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 228 விளையாட்டுத் திடல்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 74 லட்சம் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. வடசென்னையில் உள்ள மைலேடி பூங்காவ񉏧ல் 2 நீச்சல் குளங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன. அண்ணாநகரில் கட்டப்பட்டு வரும் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு மேயர் மா. சுப்பிரமணியன் பேசினார்.
 
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை நகரில் உள்ள 26 பூங்காக்களில் யோகா மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடுத்த மாதம் முதல் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 9 வரை இது நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான பயிற்சி ஆசிரியர்களை மாநகராட்சி நியமிக்கிறது என்று மேலும் அவர் கூறினார்.