ஜோதிடம்



வார ராசிபலன்

கும்பம்

கும்பம்: சந்திரன் சஞ்சாரம் காரணமாக உற்சாகமாக செயல்படுவீர்கள். சுக்கிரன் பலம் பெறுவதால் ஆடல், பாடல் என குதூகலமாக இருப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை நீங்கும். குடும்பத்தில் பழைய பிரச்னைகளை பற்றி பேச வேண்டாம். இடமாற்றம் சம்பந்தமாக முக்கிய முடிவு ஏற்படும். கல்வி வகையில் அலைச்சல், செலவுகள் இருக்கும். பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருவீர்கள். வாரக் கடைசியில் திடீர் பயணங்கள் இருக்கும். உத்யோகம் சீராக இருக்கும். உயர் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் லாபகரமாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் செலவுகள் வரலாம். ரியல் எஸ்டேட், செல்போன் ரீசார்ஜ் தொழில் கை கொடுக்கும்.

அவிட்டம்: ஆலய தரிசனம்.
சதயம்: அலைச்சல்.
பூரட்டாதி: முக்கிய முடிவுகள்.